திங்கட்கிழமை, மார்ச் 18, 2019
   
Text Size

க. பொ. த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தேசிய அடையாள அட்டை விண்ணப்பம்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

ca

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கு ஏக காலத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுமென்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

 இதற்காக விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன. மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர், விண்ணப்பங்களை கையளிக்குமாறு பாடசாலை அதிபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் இதற்கான புகைப்படத்தை திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றை இணையத்தளத்தின் மூலமாக சமர்ப்பிக்க முடியும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சை முன்னதாக நடத்தப்படும் என்பதனால், தேசிய அடையாள அட்டை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் இது வசதியாக அமையும். கடந்த வருடத்தில் இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். 15 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்குத் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...24250
மொத்த பார்வைகள்...2256691

Currently are 106 guests online


Kinniya.NET