நான் கட்சி மாறி பொதுத்தேர்லில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை; நஜீப் ஏ மஜீத் (நேர்காணல்)
வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2015 15:17
தகவல் ஒலிபரப்பு முன்னால் பிரதியமைச்சரும் முன்னால் மூதூர் முதல்வருமான மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீதின் புதல்வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மூதூர் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் தினகரன் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இது.
கேள்வி
கடந்த கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற நீங்கள் மாகாண சபையில் ஆட்சியில் எத்தகைய பிரச்சனைகளை சந்தித்தீர்கள்.
பதில்: இந்நாட்டை கடந்த இரண்டு தசாப்த காலமாக உலுக்கி வந்த கோர யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம் வடக்கு கிழக்கே பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களையும் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் நாம் இழந்தோம். மானத ரீதியான கஷ்டங்களை வட கிழக்கு மக்கள் எதிர் நோக்கினர். இந்த யுத்தத்தினால் திருமணம் முடித்த பெண்கள் விதவைகளாக்கப்பட்டு அவர்கள் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் கலாச்சார ரீதியான பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டது கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஏறத்தாள சரிசமமாக வாழ்கின்ற போதும் அவர்களுக்கிடையிலான இன நல்லுறவு சீர் குழைந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது மாகாண சபை தேர்தலில் நான் முதலமைச்சராக்கப் பட்டேன் இதன் மூலம் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை நான் பெற்றேன் இதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண சபை ஆட்சி உறுவாக்கப்பட்டது. இரண்டு தசாப்த கால யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கிய ஒரு பிரதேசத்தை குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி செய்ய முடியுமென்பது ஒரு கடினமான காரியமே எனினும் எம்மால் முடிந்த வரை சிறப்பாக பணியாற்றியுள்ளோம் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்ததால் அவர்கள் பல்வேறு கொள்கைகளை கொண்டவர்கள் சில கட்சிகளின் கருத்துக்கள் இன நல்லுறவை சீர்குழைந்தவையாகவும் அமைந்து விட ஏதுவாக இருந்தது அத்துடன் ஆட்சி அமைக்க பங்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் முரன்பட்டவைகளாகவும் மாறுபட்டவைகளாகவும் சில சந்தர்ப்பங்களில் அமைந்தன இதனைவிட மத்திய அரசாங்கத்தையும் மாகாண ஆட்சியையும் தொடர்ந்து எதிர்த்து வந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டியும் விமர்சித்தும் வந்தன எமது நல்ல நடிவடிக்கைகளுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதை எதிர்த்தே வந்தனர் இன முரன்பாடுகளுக்குள் பலகிப் போன மூவின மக்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது சற்று சிறமமானதாக இருந்தது எனினும் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாம் முடிந்தளவு அபிவிருத்தி பணிகளை மேற் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி
அவ்வாறானால் நீங்கள் உங்கள் ஆட்சியில் செய்த பணிகளை கூற முடியுமா?
பதில்: மாகாணத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய சமமான பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 10கிராமங்களை தெரிவு செய்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளதோடு திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடாத்தி தற்போது அவ்வீட்டுத்திட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சொந்த காணிகளுக்குள்ளே கட்டப்பட்டுவருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் தம்பட்ட கண்ணகிபுரம் தமிழ் கிராமம், தெஹியத்த கண்டிய சிங்கள கிராமம் மற்றும் சம்பூர் நகர் முஸ்லிம் கிராம மக்களுக்காக 100 மில்லியன் ரூபா செலவில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான தாங்கிகளை அமைத்து கொடுக்கப்பட்டது. மாகாணத்தில் உள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய 645 பேருக்கு எனது தனிப்பட்ட முயற்சியின் காரணமாக நிரந்தர நியமனங்களை வழங்கினேன் அதுமட்டுமல்ல பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்பட்ட 600 சிற்றூழியர் வெற்றிடங்களை மூவினங்களையும் உள்ளடக்கியதாக நிரந்தர நியமனம் வழங்கினேன் அதிலும் எனக்கு கிடைத்த கோட்டாவில் தமிழ் இளைஞர்களையும் உள்வாங்கினேன். அதற்கான காரணம் எனது ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருந்தது. மேலும் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் யுத்தத்தால் சேதமடைந்த மூன்று இன மத வழிபாட்டுத்தளங்களை புனர் நிர்மாணங்களை செய்வதற்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளேன்.
கேள்வி
நீங்கள் பணியாற்றிய காலத்தில் தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பயண்கள் கிடைக்கவில்லையென கூறப்படுவது பற்றி?
புதில்: இதை நான் முற்றாக மறுக்கிறேன் தமிழ் சகோதரர்களை நான் எந்தக் காலத்திலும் வேற்றுக் கண்ணோட்டத்துடன் பார்க்கவுமில்லை பார்ப்பதுமில்லை நான் திருமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் இருந்தவன் அத்துடன் குறிப்பிட்ட காலம் அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறேன் எனது சேவைக் காலத்தில் தமிழ், சிங்கள முஸ்லிமென்ற இன பேதமின்றி மக்களுக்காக உழைத்திருக்கின்றேன் எந்தச் சமூகமும் என்னிடம் உதவி கேட்டாலும் நான் அவர்களை ஒரு போதும் திருப்பி அனுப்பியதில்லை முடிந்தளவில் என்னாலான பணிகளை மேற்கொண்டிருக்கின்றேன் குறிப்பாக தமிழ் மக்களுக்காக திருமலை கோணேஸ்வர கோயிலுக்கு தங்குமிட தியான மண்டபம், கிண்ணியா ஆலங்கேணி விநாயகர் கோயில், வெருகல் கோயில் ஈச்சலம்பற்று கோயில் அன்புவளிபுறம் கோயில் ஆகியவற்றுக்கு நிர்மானப் பணிகளுக்கு நிதியுதவி அழித்துள்ளேன். எனது தந்தையார் தமிழ் முஸ்லிம் உறவை பேணியவர் அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த காலத்தில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்கிளின் பிரச்சனைகளுக்காகவும் துன்பங்களுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தவர் திருமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள உறவை கட்டியெழுப்ப அவர்பட்ட கஷ்டங்களை நான் நன்கறிவேன் எந்தச் சந்தர்ப்பத்திலும் சகோதர இனங்களுடன் அன்பாக நடந்து கொள்லென்று என்னிடம் அடிக்கடி கூறுவார் அவரின் அடிச்சுவட்டாலும் அரவனைப்பிலே வழந்த நான் தமிழ் மக்களையோ சிங்கள மக்களையோ பகைமை உணர்வுடன் நோக்கியதில்லை அன்றும் இன்றும் அவர்களை சகோதர உணர்வுடனே பார்க்கின்றேன் அதே போன்று நான் சார்ந்துள்ள சமூகத்திற்காகவும் பணியாற்ற வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கிறது முஸ்லிம்களுக்கு நான் பணியாற்றுவதை சில இனவாத சக்திகள் பிழையான கண்ணோட்டத்தில் நோக்கி என்னை விமர்சித்து வந்ததை நான் அறிவேன் தமிழ் சகோதரர்களுக்கு நான் யார் என்பது நன்றாகவே தெரியும்
கேள்வி
முஸ்லிம் தமிழ் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றதாக கூறும் நீங்கள் கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறாமைக்கான காரணம் என்ன?
பதில்: முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் இறுதிக் காலப்பகுதியில் இந்நாட்டில் இடம் பெற்ற கொடூரங்களை நீங்கள் அறிவீர்கள் பொது பல சேன மற்றும் இராவண பலய போன்ற இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை திட்டமிட்டு நசூக்க எடுத்த முயற்சிகளும் அவர்களை வந்தேறு குடிகளாக நினைத்து மேற்கொண்ட செயற்பாடுகளும் உலகமறிந்ததே முஸ்லிம்களின் இதயமான குர்ஆனை விமர்சித்ததும் அவர்களின் மஸ்ஜிதுகளை தாக்கியதும் கலாலான உணவுகளை தடுக்க முற்பட்டதும் முஸ்லிம்களை வேதனைப் படுத்தியது அத்துடன் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் போன்ற உடைகளை தடுக்க வேண்டுமென போராட்டங்களை நடத்தினர் அளுத்கம பேருவலயில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம் பல்லாயிரக்கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது முஸ்லிம்களின் உயிர்கள் பரித்தெடுக்கப்பட்டன தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் கிரான்பாஸ் தெஹிவளை பள்ளிவாயல் விவகாரங்களில் முஸ்லிம்கள் வேதனையும் ஆத்திரமும் கொண்டனர் எனினும் ஆட்சியிலிருந்த மஹிந்த அரசு இந்த இனவாதிகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை இதனால் ஜனாதிபதி தேர்தலில் ஏற்கனவே மஹிந்தவின் மீது வெருப்படைந்த தமிழ் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மஹிந்தவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தது அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டதனால் முஸ்லிம் மக்கள் என்னை நிராகரித்தனர் எனினும் நான் கட்சி மாறி பொதுத்தேர்லில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை.
கேள்வி
தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் நீங்கள் ஏன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒட்டியிருக்கரீர்கள்?
பதில்: முன்னால் ஜனாதிபதி மஹிந்தவின் அதிகார பலம் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வெகுவாக குறைந்து விட்டது அவரும் இப்போது ஒரு சாதாரன உறுப்பினரே கட்சியின் தலைவராகவும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலவைராகவும் ஜனாதிபதி மைதிரிபால ஸ்ரீறிசேன இருப்பதால் தற்போது கட்சிக்கு புது இரத்தம் பாய்த்து வருகின்றார் இனவாத என்னம் கொண்டவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள இனவாதிகளின் கொட்டம் தற்போது அடக்கப்பட்டு வருகிறது எனவே எதிர் காலத்தில் இந்தக் கட்சி அனைத்தினங்களையும் அரவனைத்து ஆட்சியமைக்குமென நான் பூரணமாக நம்புகிறேன் அந்த எதிர்பார்ப்பில் இந்தக் கட்சியில் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றேன்.
கேள்வி
கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தiலாவரவான இவர் அரசியலில் ஆழ்ந்த அனுபவங்களை பெற்றவர் துடிதுடிப்பானவர் மர்கூம் அஷ்ரபின் அரசியல் பாசறையில் வழந்தவர் கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகியுள்ளமை இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் ஒரு திருப்பமாக கருதப்படுகின்றது அத்துடன் அமைச்சரவையில் சிங்கள தமிழ் முஸ்லிம்கள் அங்கம் வகிப்பதும் எதிரணியை சேர்ந்த பலர் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதும் ஒரு நல்லாட்சியை நோக்கிய பயணமே மத்திய அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு கிழக்கு மாகாண சபையே முதன் முதலாக வித்திட்டது மாகாண சபை பல்வேறு கொள்கைகள் உடைய கட்சிகள் அங்கம் வகிக்கின்ற போதும் மக்கள் நலத்திட்டங்கள் என வரும் போது அவர்கள் ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கின்றனர். நமது மாகாண சபை ஆட்சிக்கு கிழக்கு மாகாண சபை ஒரு முன்னுதாரனமாக திகழ்கின்றது மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சகல இனங்களையும் அரவனைத்து மக்கள் பணியை மேற் கொண்டு வருகின்றார்.
நேர்காணல்: ஜமால்தீன் எம். இஸ்மத்
சிறப்புக் கட்டுரை

Comments
RSS feed for comments to this post