முத்துச் சிப்பி

கருஞ்சுவரில் குழாய் வரைந்து..
ஆவலை மின்னவிட்டவாறே

இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.

எப்போதும் போலே

எனக்கு மட்டுமில்லை நூறு விழுக்காடு

முழுமைக்கான கரகோஷங்களுக்காய்

நடனமாடிய விரல்களிலிருந்தே

எனை நோக்கியும் நீள்கின்றன

சுட்டு விரல்கள்

இனியுமென்ன

சுரண்டித் தெரியும்

கடைக் கத்தரிக்காய் ஆகிற்றென்

கற்பித்தல்.

இல்லா இடைவெளி வேண்டி

கிளறப் படுகின்றன

ஆவணக் கோப்புகள்.

துவக்க வருஷத்தின்

பேறு கால விடுமுறை நாட்களோ

இல்லை

நிறைந்து

முந்தானைக்கு மேலாயும் கசிந்த

செல்லக் குழந்தையின் கதறல்

துடைத்த நிமிஷத் துளிகளோ

மிகப் பெரும் நேரத் திருட்டாய்

உணரப் படுகிற

இக்காலங்களுக்குள்

கணக்கில் வருவதேயில்லை

அதற்கான பதிலீடுகள்.

உண்ணப் படாமலேயே குவிந்தழுகும்

பணக்கார வீட்டுச் சமையலறைபோலே

பல ஆய்வறைகள்

தூசித்துத் தூங்கையிலே

கருஞ் சுவரில் குழாய் வரைந்து……

காற்றிலேதான் செய்துவித்த

பரிசோதனைகள் யாவுமே

பயணப் பட்டிருக்குமா

பரீட்சை விடைத்தாள் வரைக்குமென்ற

வினாவுக்கு மட்டும்

யாரிடமுண்டு விடை.

இது எனக்கான நேரம்

இரைச்சலாய் மேலெழும் கோபமாயோ

இல்லை

கண்ணீராய் வழியும் சாபமாயோ

பதிலை எதிர்பார்த்திருந்த

பதட்டமான கணங்களுக்குள்

மிக மௌனமாகவே

மீட்டிக் கொண்டிருக்கிறேன்

பேரறியா அந்தச் சீனக் கவிஞனின் வரிகளை..

நான் கேட்கிறேன் -மறக்கிறேன்.

நான் பார்க்கிறேன்- உணர்கிறேன்

நான் செய்கிறேன்- விளங்கிக்கொள்கிறேன்…..

எஸ்.பாயிஸா அலி

மைதானம்
உதைத்தலின்போதே நிகழ்ந்துவிடுகிறது

உதைபடுதலும்

வலிமையின் தீவிரங்களில்தானே

வலியின் உச்சங்கள்

ஒரு குண்டுமுனைக் காந்தம்போலே

வளரிளம் பருவத்தர் பார்வைதனை

வெகுஇயல்பாய் ஈர்த்துவிடுகின்றன விளையாடல்கள்

ஆனாலும்

வெறும்பாடநூலுக்காய்

எப்போதுமே அப்புலந்தனைச்

சிதைப்பதிலேயே குறியாயிருப்பர் தந்தையர்

காலங்காலமாய் களைக்காமலேயே

ஓடி உதைத்து விளையாடுமிவர்

சொற்பந்துகளுக்குள் அதிர்ந்து நசுங்கி

மூச்சுத் திணறுகிற மைதானமாய்  அன்னையர்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

உன்னிரு மின்வரிகள்
கமழும் பூக்கூடையாய் பாசத்தை மட்டுமே ஏந்தி வருமென்

ஆயிரங்கேள்விகளுக்கோர் ஒற்றைப் பதிலாய்…..

வானம் பத்திரப்படுத்தும் அபூர்வ மின்னலென…..

இருந்து நின்று எப்போதாவது வந்துசேரும்

விளிப்பு முடிப்பற்ற உன்னிரு  மின்வரிகள்.

பரிவு பந்தமெலாஞ் சீவிச்சீவிக் கழித்தபடி தனித்திருக்குமவை

சுமாராய் உன்போலான போதுமென்ன

வரிக்குறளை விரித்து விரித்து வாங்கிய பட்டமுண்டு

வரிக்கு முன்னும் பின்னுமாய்

விட்டிருக்கும் நெடிய இடைவெளிகளை

முன்னம் நீ புழங்கிய சொல்லிட்டே நிரப்புவேன்.

அழகிய கவிதையாயது மேலெழுந்து மேகமாய் மிதக்கும்

சடசடத்துக் கீழிறங்கும்

அலையெழுப்பி அகவும்

கீச்சிட்டபடி ரீங்காரமிடும்

தென்னம்பிஞ்சுகள் சொரித்தவாறே

பூவிதழை அசைத்தசைத்துப் பனியுதிர்க்கும்

பாகாய் பரவிப்பரவி உறைய வைக்கும்

ஆய்ந்து முடித்ததுதான் நியுற்றன் விதியெனில்

ஒரு தென்னைமரமாய்

நெடிந்தோங்கியிருக்குமுன் பெருங் கர்வங்கூட

என்றாவதுடைந்து சிதறத்தானே கூடும்

ஓயாது தட்டுமென் வலிய அன்பின்முன்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி..
குவிந்த விரல்களூடே

குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற

உள்ளங்கைச் சிறைக்குள்

படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள்

குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை.

கரைந்திடுங் கணங்களில்

வர்ணங்களின் பிசுபிசுப்பும்

படபடப்பின் அமர்முடுகலும்

ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு

சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ

விண்ணளவுக்குமான அதன் விடுதலையை.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

பிழைபிழையான இனங்காணல்…
பிழையான அவதானங்களும்

பிழையான கருதுகோளுமாய்

நிகழ்ந்தேறிய சோதனை முடிவது

துர்மணமாய்

குடுவைதனைச் சுற்றிச் சுழன்றதில்

ஆய்வறை தாண்டியே

அடுத்தடுத்த அறைகளுமே

மூச்சுத் திணறுகையில்தான்

மெல்லப் புரிதலுறுகிறேன்…..

இன்றளவும்

மிகச்சரியென இறுமாந்திருந்த

என்

பிழைபிழையான இனங்காணல்தனை.

கிண்ணியா  எஸ். பாயிஸா அலி

வாசகர்களின் கைதட்டல்களே ஓர் எழுத்தாளனை ஊக்குவிக்கும்..
ஈழத்து இலக்கிய உலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் கிண்ணியாவைச் சேர்ந்த ஆசிரியை ஜெனீரா ஹைருல் அமான் குறிப்பிடத்தக்கவர்.

பாலர் பாடல் சிறுவர் இலக்கியம் (1991), சின்னக்குயில் பாட்டு சிறுவர் இலக்கியம் (2009), பிரியமான சினேகிதிசிறுகதைத் தொகுதி (2009), மிதுஹாவின் நந்தவனம் சிறுவர் கதைகள் (2010) என பல நூற்களுக்கு சொந்தக்காரர். சிறுவர் இலக்கியத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர்.

சின்னக்குயில் பாட்டுக்காக சிறந்த நூலுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருது 2010 உட்பட பிரதேச, மாவட்ட மட்டங்களில் விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றவர்.

இன்னும் சில நூற்களை அச்சு வாகனத்தில் ஏற்றத் தயாராகிக் கொண்டிருக்கும் இவர், நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இலங்கை வானொலியிலும் பல நூறு ஆக்கங்களோடு வலம் வந்தவர் வருபவர். அவருடைய எழுத்துலகம் பற்றி மேற்கொண்ட உரையாடலை பெண்கள் தேசம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

கேள்வி: இலக்கியம் தொடர்பான ஆர்வம், ஆரம்பம் எப்போது, எப்படி உருவானது?

பதில்: எனது தந்தை ஓர் எழுத்தாளர் என்பதால், அவரிடம் நிறையப் புத்தகங்கள், பத்திரிகைகள் காணப்படும். அவற்றை ஆர்வத்துடன் வாசிக்கும் பழக்கம் ஏற்பட் டது. நாளடைவில் பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஆக்கங்களை அனுப்பினேன். அவை ஓரிரு வாரத்துள் பிரசுரமாகியும் ஒலிபரப்பாகியும் எனது ஊக்கத்தைத் தூண்டின. இதனைப் பாராட்டி என் அபிமான வாசகர்கள் உள், வெளி நாடுகளிலிருந்து மடல்கள் அனுப்பினர். அதிலிருந்து எனது இலக்கியப் பணி ஆரம்பமானது. வாசகர்களின் கைதட்டல்களே ஓர் எழுத்தாளனை ஊக்குவிக்கும் என்பதில் எவ்வளவோ உண்மைகள் உள்ளன.

கேள்வி: இதுவரையான உங்கள் நூல் வெளியீடுகள், அதில் நீங்கள் பெற் றுக் கொண்ட அனுபவங்கள் குறித்து?

பதில்: எனது நூல் வெளியீட்டில் அதிகமானோர் கலந்து கொள்ள விரும்பு வார்கள். வௌ;வேறு ஊர்களிலிருந்தும் இரவோடு இரவாக வந்து சேர்ந்துவிடுவார் கள். அறிவிலும் அனுபவத்திலும் திறமை வாய்ந்தவர்கள் என்மீதும் எனது எழுத்து மீதும் கொண்ட அபிமானத்தால் எத்தனை வேலைகளிருப்பினும், அவற்றைத் தள்ளி வைத்துவிட்டு எனது வெளியீட்டு விழா வில் கலந்து கொள்வார்கள். இப் பெரியார் களின் வழிகாட்டல் எனக்குப் பல அனுப வங்களைப் பெற்றுத் தந்துள்ளது. என் ஆக்கங்கள் நூலுருப் பெறுவதற்குப் பக்கபலமாக விரிவுரையாளர் கலைவாதி கலீல் செயற்பட்டார். தற்போது அருள் வெளி யீட்டகத்தால் இரு நூல்கள் வெளியிடப் பட்டுள்ளன.

கேள்வி: திருகோணமலை மாவட் டத்திலேயே சிறுவர் இலக்கியம் தொடர் பாக இயங்கிய முதல் பெண்மணியாக அறிப்படுகிறீர்கள். சிறுவர் இலக்கியம் பற்றிச் சொல்லுங்களேன்.

பதில்: எத்தனையோ எழுத்தாளர்கள் பல்வேறு கோணங்களிலிருந்தும் எழுதுகிறார்கள். அதில் சிறுவர் இலக்கியம் சற்றுக் கடினமானது எனக் கூறுகின்றனர். காரணம், எழுதுபவர்கள் சிறுவர்களாக மாற வேண்டும். அவர்களைப் புரிந்து, எளிய நடையில் எழுத வேண்டும். நான் அத்துறையை நேசித்து, குழந்தைகளுக்காக எழுதி வருகிறேன்.

இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய கேணிப்பித்தன் அவர்கள், திருமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியம் படைத்த முதற் பெண் படைப்பாளி எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் எனச் சிறுவர்களுக்காக 4 நூல்களை வெளியிட்டுள்ளேன். என்னிடம் மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர். என் எழுத்துக்கள் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். எனது இலக்கியக் குழந்தைகள் தவழ்வதற்கு ஆயத்த நிலையிலுள்ளன.

கேள்வி: பொதுவாக சிறுவர் பாடல் கள் தொடர்ந்தும் ஒரே வாய்ப்பாட்டுக் குள் அடங்குவது போல உள்ளதே. புதுக் கவிதை நவீனப்படுவது போல சிறுவர் கவிதையில் ஏதும் புதுமை, மாற்றங்கள் புகுத்துவது பற்றி யோசிக்கவில்லையா?

பதில்: இன்று எல்லோராலும் பேசப்படும் வார்த்தை புதுமை, நவீனம் என்பதாகும். நானும் எத்தனையோ எழுத்தாளர்களின் கவிதை, கதை, கட்டுரை என வாசித்து வருகிறேன். புதுமையின் சாயலைக் காண வில்லை. அன்று வாழ்ந்த சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளைப் பாருங்கள்.

ஓடி விளையாடு பாப்பா நீ

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!

இப்பாடல் வரிகள் யாருக்காவது புரியாமலிருக்குமா? இதுபோல தேசிக விநாயகம் பிள்ளையின் கவி வரிகளை நோக்குவோம்.

உடலின் உறுதி உடையவரே

உலகின் இன்பம் உடையவராம்

எவ்வளவு அற்புதமான வரிகள்! இவர்களது இலக்கியம் இன்றுவரை சாகாவரம் பெற்றவையாக இருப்பதற்குக் காரணம் என்ன? தமது கருத்துக்களைச் சமூகத்துக்குத் தெளிவாக, எளிய நடையில் விளக்கியதே யாகும். இவை பழைமை வாய்ந்தவை என ஒதுக்கிவிட முடியாது. புதியதோ, பழையதோ மக்களுக்கு நல்லவை சென்றடைந்தால் சரி.

கேள்வி: உங்களைக் கவர்ந்த குழந் தைக் கவிஞர், கதையாசிரியர் யார்?

பதில்: பொதுவாக எல்லா எழுத்தாளர் களும் என்னைக் கவர்ந்தவர்களே. குழந்தைக் கவிஞர், கதையாசிரியர் என்ற பாகுபாடு எனக்குக் கிடையாது. நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் வாசிப்பேன். அழ. வள்ளியப்பா, பாரதியார், தேசிக விநாயகம் பிள்ளை, மஹாகவி, பெரிய சாமி, கேணிப் பித்தன், துரைசிங்கம், ப.பாள சிங்கம் போன்றோரது குழந்தைக் கவிதைகளையும் சோதி, சுதாராஜ், சங்கர நாராயணன், ஆச்சா, சம்பத், ஆர்.வீ. பதி, கே.எம். இக்பால், கமால், ஓ.கே. குணநாதன் போன்றோரின் கவிதைகளையும் குறிப்பிடாலம்.

கேள்வி: எவருடைய கவிதைகளை விரும்பி வாசிப்பீர்கள்?

பதில்: குறிப்பிட்டு இவர்களுடைய க(வி)தைகளை வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. பிற நாட்டு எழுத் தாளர்களைப் போன்று, எமது நாட்டவர், எமது ஊரவர் கருத்தாழமிக்க கதைகளை எழுதி வருகிறார்கள். அவர்களது கதைக ளையும் வாசிப்போன். லட்சுமி, அனுராதா ரமணன், சுஜாதா, கலைவாதி கலீல், நிஸ் வான், அலி, தாஹிர், நஸ்புள்ளா, அமீர், ஜரீனா, சுலைமா இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

கேள்வி: ஏனைய (உள்நாட்டுவெளிநாட்டு) பெண் எழுத்தாளர்க ளோடு உங்கள் உறவுகள் எப்படி? அவர்களின் படைப்புக்களை வாசிக்க முடிகிறதா?

பதில்: சில பெண் எழுத்தாளர்களுடன் கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்புகளுண்டு. எழுத்துத் துறையில் காலடி வைத்த பின்னர், மறைந்து போன சொந்தங்கள் மீண்டும் தளிர்விட ஆரம்பமா னது. சகோதரர் அமீர் அலியின் தந்தை ~~நாம் மறைந்தாலும் எமது பிள்ளைகளின் எழுத்துத் துறையினால் உறவுகள் தொடர்ந் திருக்கும்|| என்பார்.

அஷ்ரபா, சுகைதா, ஜெஸ்மினா போன் றNhர் எழுதும்போது ~சொந்தம் எப்போதும் தொடர் கதைதான், முடிவே இல்லாதது- என்றே மடல் வரைய ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுடைய ஆக்கங்களுடன் ஏனைய பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை யும் வாசிக்க முடிகிறது. அத்துடன், என் எழுத்துக்களால் கவரப்பட்ட பல உள் (வெளி)நாட்டு அபிமானிகளுடன் நீண்ட காலமாகத் தொடர்புகளுண்டு. அதன் பிரதிபலிப்பாகவே ~பிரியமான சினேகிதி| எனும் சிறுததைத் தொகுப்பை வெளியிட் டேன்.

கேள்வி: கதை, கவிதைகளுக்கான கருவினை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

பதில்: சமூகம், அமைதியான சூழுல், தனிமை, மழை, இரவு, பாடசாலை என்ப வற்றிலிருந்து கருவினைப் பெற்றுக் கொள்வேன்.

கேள்வி: உங்கள் சூழல், குடும்பம், சமூகம் எழுத்து முயற்சிகளுக்கு சாதக மாக உள்ளதா?

பதில்: நிச்சயமாக குடும்பம், சமூகம், சூழல் என்பன எனக்குச் சாதகமாகவே அமைந்துள்ளன. ஆரம்பத்தில் எனது தாய், தந்தை என்னைத் தட்டிக் கொடுத்தார்கள். திருமணத்தின் பின் எனது கணவர் இலக்கி யப் பணியைத் தொடர்வதற்கு ஆதரவாக உள்ளார். இதனால்தான் 5 நூல்கள் வெளி யிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மொத்தத்தில் இறைவனுக்கே நன்றி கூற வேண்டும், அல்ஹம்துலில்லாஹ்.

கேள்வி: இன்னும் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

பதில்: ஆம்! சமூகத்துக்கு நல்ல கருத் துக்களைக் கூற வேண்டும். எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய இலகு நடையில் எழுத வேண்டும். நான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. அதிகம் வாசிக்க வேண் டும். நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய வேண்டும். எழுத்தாலோ, நாவா லோ யார் மனதையும் புண்படுத்தக் கூடாது.

நேர் காணல்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

நன்றி

பெண்கள் தேசம்

சிறுமீனாய்..
நீலப்பச்சையாய் நீளப்பரவிய

பசுமைகளின் ஆழங்களூடே

உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட

மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே

தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்

சில்லெனும் குளிரோடை மறைத்தபடி

அனல் சொரிகிறாய்

எரிந்து பிடித் தூசாவோமெனப் பயந்தொதுங்குமிவர்

கால்தடம் விலக்கிப் பயணப்படுகிறேன்.

கிரகங்கள் தனித்தியங்கத் தொடங்கு முன்பான

ஆதிக்கனலில்

இழை திரித்து சிறகு முடித்தே

காலத்தைச் சுருட்டிக் கைப்பைக்குள் புதைத்தபடி

ஏழுபூமி ஏழுவானம்

தாண்டியும் பெயர்கிறேன்

ஒளிந்திருக்குமக் குளிரோடைக்குள்

செட்டைகள்  விறைத்திட  நீந்திக் களித்தபடி

என்றென்றைக்குமா யதில்

தங்கிவிடத் துடிக்குமொரு சிறுமீனாய்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

பாக்கியவதிகள்..
ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்களை விட்டும்

ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது

ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.

பலவேளைகளில்

பாதப் பெருவிரல் சுரண்டுகிற

செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்

மிகச்சில பொழுதுகளில்

அதுவோர் அடிமைக்கான அதிகாரக் குரலாயுங் கூட.

திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற

கூர்நகங்களிடையேயான தொடர் பயணங்களுக்குள்

எப்படித் திறப்பேன் முகத்திரை.

அரங்கும் தளமும்

அவளுக்குமென்றான பெருமித முகங்களின்

மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களூடே

மெல்லமாய் உணர்கிறேன் ….

வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான

ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட

உம்மம்மாக்கள்தான் பாக்கியவதிகள்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

எளிமையான மொழியும் தன்னுணர்வு சார்ந்ததுமாய் கிராமியமணம் குன்றாமல் ஜொலிக்கும் கவிதைகள்..
கண்ணுக்குச் சற்றும் புலப்படாமல் மண்ணுக்குள் புதைந்து வாழும் மண்புழு தொட்டு கடலின் மிக ரகசியமான புதர்களில் நீந்தும் மீன் கூட்டங்கள் வரையும் நொடியில் உடையக் காத்திருப்பவைகள்தான்… எனச் சொல்லும் கவிஞர் ஜமீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பே உடையக் காத்திருத்தல்.

1993 இல் சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கும் கவிஞர் ஜெமீலின்முதல் கவிதைத்தொகுதி தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள் யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும் தடாகம் இலக்கியவட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றிருப்பது குறித்துச் சொல்லப்படவேண்டியவை.

தென்னிந்தியப்  பதிப்புகளுக்கு நிகரான  தளக்கோலம்.  பிளவுகள்நிறைந்த கற்சுவரும் குருதி கசியும் ஒற்றைவிழியோடான பெண்ணின் பாதிமுகமுமாய் கவிஞர் நவாஸ்சௌபியின் அட்டை வடிவமைப்பு தலைப்போடு வெகுவாய் ஒன்றிநிற்கிறது.

உள்ளே  60 இற்குமதிகமான கவிதைகள்  எளிமையான மொழியும் பரவலான  களமும் தன்னுணர்வு சார்ந்துமாய்  கிழக்கின் கிராமியமணம்  குன்றாமல்ஜொலிக்கின்றன.

யுத்தம்  தீர்ந்துபோனதற்கான ஆதாரங்களை ஊடகங்கள் மாறிமாறி முன்வைத்தபோதிலும்  அது தந்த மாறாவடுக்கள் பாதிக்கப் பட்டோர் மனசை விட்டும் அகலுவதாயில்லை.

கவிஞர் ஜமீலின்

கூட்டி அள்ள முடியாதபடி சிதறித் தொங்கும் பள்ளிச்சிறார் பிணங்களையும்….

அதற்குள் வெடித்துச் சிதறுகிறது பேருந்து….

துப்பாக்கி இரைச்சலில் கிழிந்து பறக்கின்றன பூக்கள்….

ஒரே இரவில் நூற்று மூன்று பேரைக் கொன்று குவித்த குரூரத்தை….

புதைகுழிகளின் காடாகிறது பூர்வீக நிலம்….போன்ற வரிகள்கூட இதற்குச் சான்றுதான்.

உம்மா எனும் கவிதை அவலட்சணங்களுக்குள் மறைந்திருக்கும் தாய்மையின் மிக உன்னதமான பண்புகளிலொன்றான தியாகம் பற்றிப் பேசுகிறது.இதுதவிர பெண்மையின் மெல்லிய உணர்வுகள் அவர்தம் அடிமைத்தளை, சுயபரிவு ,ஆதங்கம் பற்றியெல்லாம் தன்மையில் பேசியிருப்பது வியப்பிற்குரியது. எதிர்ப்பாலினை தன்னிலைப் படுத்திப் பேசும் கவிதைகள்குறைவுதானே. அதிலும்

என் நெடுந்துயர் நிர்க்கதி பற்றி விபரித்தபோது நீயென் உடலை மட்டுமே  குறிவைத்துப் பேசினாய்…

தெருநாய்களது வன்மங்களாலும் வக்கிரப் பார்வைகளாலும் விரட்டிக் குதறப்படுகிறது என் தாவணிக்காலம்…

என் தரப்பின் சுயம் மட்டும் நசிந்தே கிடக்கிறது…

பட்டப் படிப்புக்குக் கொட்டிய காலத்தையும் காசையும் சிறுகச் சிறுகச் சேர்த்திருந்தால் நிச்சயம் அவனை வாங்கி வாசற்படியில் கட்டிப் போட்டிருக்கலாம்..     .

எனப் பெண்வலி  பேசுகிற இவர் வரிகளில் பாசாங்குகளில்லை. மேலும்

பருவப் பெண்களின் கன்னக்குழிகளில் காணாமல் போய்விடுகிறேன்….

எனும் மென்மையான வரிகளில் சுயம் பாடத் தவறவுமில்லை.

வானத்தைத் துளைத்துக் கொண்டு விரையும் தற்கால விலைவாசி பற்றி ஆதங்கிக்கிறது ஒறுப்பு கவிதை.மேலும், சமூகநீதி இயற்கை அறம் பற்றியெல்லாம் கொஞ்சமாய் ஆயினும் வெகு அழுத்தமாய் சுட்டிப் போகின்றன சில கவிதைகள்.

இவைகளை விடவும் தொகுப்பில் எனை அதிகம் பாதித்தவை சாச்சாவின் ஆடுகள், சித்திரவதைக்காலம்,  கல் ,முன்பள்ளிப்பாடல் ,குட்டிநட்டிக்காலம், காடு ,பிரம்பு, அடையாளம், தத்தெடுத்தல் போன்ற கவிதைகளுள்ளிருந்த சில பரிதாபமான வரிகள்.

கவிஞர் ஜெமீல் ஆசிரியப்பணி புரிபவர் போலும் .குழந்தை உளவியல் பற்றிய நல்ல புரிதலோடு பேசுகிறார்.

குழந்தையர்தம் உண்மையுலகிற்கும் அதன் கற்பனையுலகிற்கும் தெளிவான வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியாதது பிள்ளைப் பருவம்.உடல் ,உள ,சமுக, மனவெழுச்சி ,மொழிவளர்ச்சி, விளையாட்டுத்திறன், அறநெறி வளர்ச்சி என்பன வளர்ச்சிபெறத் தொடங்கும் இப்பருவத்தில் ஒவ்வொரு குழந்தையினதும் குடும்ப, பள்ளி ,சமூகச்சூழல் பாதுகாப்பும் அரவணைப்பும் நிரம்பியதாகக் காணப் படவேண்டியது மிக மிக அவசியமாகும். இதுவே அப்பிஞ்சு மனதின் பெருத்த எதிர்பார்ப்புங்கூட.ஆனாலும் மேற்சொன்ன குடும்ப, பள்ளி, சமூகச்சூழலில் இவ்வரவணைப்பு மறுக்கப் படுவதும் அப்பிஞ்சுகள் குரூரமான மனக்காயங்களுக்கு உட்படுத்தப் படுவதும் பெருங்கொடுமை.

பிரம்பாய் மாறி இவர் பேசுகிற

ஒரு காட்டுமிராண்டியிடம் சிக்கி சிலரின் வகுப்பறைக்  கனவுகளைச் சீரழித்தபோது….

என்ற வரிகளும் மேலும்

சாளவாய் படிந்தபடி கவடு கிழிந்த காற்சட்டையோடு….

சினெமாவில் பார்த்துப் பயந்த சிறைச்சாலை போன்ற என் பாடசாலை…

படிப்பின் அவசியம் விபரிக்கப் படும் போதெல்லாம் சாச்சா வந்து வந்து போவார் பெரிய பெரிய கொம்புகளோடு…

சீரழிகிறது என் முன்பள்ளிக் காலம் ஆடுகளோடு ஆடுகளாய்….

போன்ற உணர்வுபூர்வமான வரிகள் இல்லங்களிலும் பள்ளிகளிலும் நிகழ்கிற வன்முறையின் உச்சம் பற்றிப் பேசி உணர்வுகளைக்  கசிய வைப்பவை.

பொதுவாகத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே அருமையானவை. கவிஞர் அலறி சொல்வதுபோல

ஒற்றை  வாசிப்பில் முழுக்கவிதையையும்  உள்வாங்கி ஒரு கணப் பரவசத்தைத்  தொற்றச்செய்பவை. இக்கவிதைகள்.

கவிஞர் ஜெமீலின் தொடர் கவிதை முயற்சிகளுக்கும் அதுசார் உயர்ச்சிகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் – உடையக் காத்திருத்தல்.

நூலாசிரியர் – கவிஞர் ஜமீல்

தொலைபேசி – 077 9689392

வெளியீடு – புதுப்புனைவு இலக்கிய வட்டம்

விலை – 200 ரூபாய்

கிண்ணியா  எஸ். பாயிஸா அலி

தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்…
இன்னும் முகையவிழாத பிறை

கொஞ்சம் கொஞ்சமாய் காந்தி

திரியாகிப் பற்ற வைக்கிறது

திசைகளை

புள்ளியாய் விரியும் பெருநாள்

உலகமகா பாவிகளின்

கிழிசல்களைத் தைத்து

கந்தல்களைத் துவைத்து

பெருநாளினை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்த புனித நோன்பு நாளொன்றில் ,கரம் சேர்ந்திருந்த  சகோதரர் நபீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்ட  எதுவும் பேசாத மழை நாளின் மூன்றாவது கவிதையின் சில வரிகளிவை.

கவிதைகளூடே இதுகாலவரை கண்டுரசித்த பிறையினின்றும் மிகவும் மாறுபட்ட வடிவேந்தி மிளிர்கிறது இன்னமும் முகையவிழாத இப்பெருநாள்பிறை.

பக்கமொன்றைத் தாண்டாத வகையிலான 50 இற்குமதிகமான கவிதைகள் எழுபது பக்கங்களுக்குள் இத்தொகுப்பிலுண்டு.

கடலின் பல்வேறு வகிபாகங்களையும் தன் முதல் தொகுப்பின் வரிகளுக்குள் விரிந்த காட்சிகளுடே நிகழ்த்திக் காட்டிய கவிஞர் இதிலே மழையின் பல்வேறு பிறதிருப்பங்களையும் அது செயற்படுத்தும் வெவ்வேறு மந்திர வித்தைகளையும் தானே மழையாகிப் பெய்திருக்கிறார்.

பகலை மூடும் இவரது மழை, மரங்களுக்கு கொண்டை முடிவதில் ஆனந்திக்கிறது. தன் தாரைகளைத் திசையெங்கிலும் செழித்த மரமாக்கின்றது.ஈரமுற்றத்தில் வைகறை பதிக்கின்றது. சின்னஞ்சிறிய பந்தலாகிச் சொட்டுகிற தறுவாயில் வானவில் தொங்கும் மூலையில் தேனீரருந்துகிறது.குதிரைகள் பூட்டப்பட்ட படையெடுப்பாக வெள்ளத்தை அலைய விடுகிறது.அடைமழையாகி விளக்கேற்றுகிறது.கோபமாய் புள்ளியிடுகிறது.தூவானமாகி ஜன்னலருகே பயம்பயமாய் தெறிக்கிறது.ஒரு கணத்தில் கனலாகி இவரை வறுக்கும் மழை மறுகணம் ஒரு குழந்தை போலே பின்னால் அழுது கொண்டும் வருகிறது. மேலும்  வேறோரு கவிதையில் இம்மழையின் துவக்கத்தை கடல் படாது மழை படாது என வெகு கச்சிதமாய் கூறுகிறார். கடைசியாகப் பெய்த மழை இரக்கமில்லாமல் தன் மணல் வீட்டைச் சரித்ததாலோ என்னவோ தான் எழுதும் போது மட்டும் எதுவும் பேசாமல் பொழியும் இம்மழை இவரைப் பயங்கொள்ளவும் வைக்கிறது.

தொகுப்பிலுள்ள வசீகரமான கவிதைகளிலொன்று கடல் தெருக்கள்.

மிக எளிய வரிகள் கொண்டு

அதிராதிருக்கும் தொனியில்,

சிணுங்கும் மீன்களென்ன யார் பாடினாலும் அழகுதானே.

அடியாழ நீரின் அற்புத அமைதியை அழகாய் மிதக்க விட்டிருக்கிறார் தன் கடல் தெருக்கள் கவிதையில்.

யாழினிது குழலினிது என்பார்,மக்கட் தம் மழலைமொழி கேளாதாரெனும் தொன்மங்களுக்குள் எமை அழைத்துப் போகின்றன தொலைத்தவர்கள் தொலைந்தனர் எனும் ,குழந்தைகள்  தொடர்பான கவிதையின் சில வரிகள்.

மேலும்,  என்னைத் தனிமையானவனாகவே

எப்போதும் பார்க்கிறேன்….

என் இமைகளும் இறகுகளும்

தனித்திருத்தலின் வலியை

கண்ணீராய் ஒழுக விடுகிறது எனப் பரிவினை அவாவி நிற்கின்றன பிரிவு தொடர்பான சில வரிகள்.

பொருளாதார மேம்பாட்டுக்கான பெருநகரங்கள் நோக்கிய இடம் பெயர்வுகளும் அது தொடர்பான பதிவுகளும்  நமக்கொன்றும் புதிதில்லை.ஆனாலும்  பெரும்பாலான அண்மையக் கவிதைகளில் நகரவாழ்க்கையின்  நேர், எதிர் இயல்புகளைக் கூடுதலாகவே காணக்கிடைக்கின்றன. கடிகாரம் காட்டாத நேரம் இவ்வகைக் கவிதைகளிலொன்று.

வேகமான விசித்திர வீதிகளில் அலைகிறேன்.

பெருநகரங்கள் எனை நீரால் நிரப்புகின்றன.

நிரம்பிக் கொண்டே இருக்கிறது வயிறு…

எப்பொழுதும் கேட்க விரும்புகிற நம் நேரத்தை

அந்தக் கடிகாரம் காட்டுவதில்லை.

விட்டுப்போக விரும்பாத கிராமத்தின் பசுமையான நேரத்தைப் பெருநகரக் கடிகாரங்கள் எப்போதுமே காட்டியதில்லைதான்.

இதையேதான்

பரோல்லின் விடுமுறை பெற்று

வீடு மீளும் கைதியை ஒப்ப

நான் பெருநகரச் சிறை விலகி

வெளியே வருகிறேன்……..

…..முடிந்தது விடுமுறை

பசி கொண்ட பூதமென வாய் பிளந்து காத்திருக்கிறது

பெருநகரம்

மீளாச்சிறைக்குள் நான் மீள.

என்கிறது கவிஞர் திருமாளவன் வரிகள்.

தொகுப்பிலுள்ள உணர்வுபூர்வமான கவிதைகளிலொன்று ஒரு நிலாக்கடல்.

தன் முகம் தடவி விட்டுப்போன வாப்பாவின் இறுதியாத்திரைக் கணங்களோடு ஒன்றித்திருப்பவை.

புடைத்த விம்மலில் கடலைப் பார்க்கிறேன்…..

வாப்பா

நீங்கள் மடித்து ஒட்டிய காகிதம்

நான் அஞ்சல்காரன்….

தூரம் பாரமாகி கால் தள்ளாடுகிறது.

….மழை தேடி வானத்தை அண்ணாந்தேன்

வாப்பா

விண்மீன்களெல்லாம் உங்களுடையவை.

எனும் வரிகளோடு நாமும்  வானத்தை அண்ணாந்தால் வானம் கறுப்பாகிக் கிடக்க விண்மீன்களோ எம் விழிகளிலிருந்தும் துளிகளாய் உதிர்கின்றன.எவர் மனதையும் இளக்கிப்போகும் மிக நெகிழ்வான வரிகள்.

இன்னும் சில கவிதைகளில் தன் இணை மீதான இறுக்கங்களை நெருங்கியும் விலகிநின்றும் பேசுகிறார் கவிஞர்.

ஒருசில கவிதைகள் மறுவாசிப்பினைக் கோரிநிற்பவை.ஆனாலும் நாளின் மிகக் குறுகிய பொழுதினில் மாத்திரமே எழுத்து சார்ந்துஇயங்கக் கூடிய என்போன்றோரை விடவும் நவீன பின்நவீனச் சூழலில் தொடர்ச்சியாய் இயங்குவோரால் இச்செறிவான வரிகளின் ஆழ அகலங்கள்,குறைநிறைகள்,அவை அடுத்ததாயும் பயணப் படவேண்டிய திசைகள் தொடர்பிலெல்லாம் விரிவாகப் பேசப்படக்கூடும்.

தொகுப்பின் கடைசிக் கவிதை இது

அவ்வளவு வேகத்துடன் நீளும் நம் சத்தம்

பைத்தியத்தின் ஒலியெனக்

கதவுகளைத் தாழிடுகின்றனர்.

தன் கவிதைகள் தொடர்பில் கேட்டுச் சலித்த எதிர்வினைகளுக்குள் முளைத்தெழுந்ததோ இக்கவிதை.

முதல் தொகுதிக்குப் போலவே இதற்கும் கவிஞர் சோலைக்கிளியே அணிந்துரை எழுதியிருக்கிறார். கவிதைகளைப் பகுத்தும் பிரித்தும் தாம் வரைந்த சட்டகங்களுக்கூடாக வாசகரை நோக்கச் செய்யாத கவிஞர் சோலைக்கிளியின் நேர்த்தியான அணிந்துரையில்  வாழ்க்கை அழகாக அழகாக ஒரு படைப்பாளியின் படைப்புகளும் அழகாகும் ஆழமாகும் என்பதற்கு நபீலின் கவிதைகளும் எடுத்துக் காட்டானவை. எனும் வரிகள் நூலின் கனதியைக் கூட்டக் கூடியவை.

கவிஞர் நபீலின் ஆழமான வாசிப்பனுபவங்களையும் கடுமையான உழைப்பையும் இத்தொகுதியினூடே காணமுடிகிறது . சகோதரரின் தொடர் கவிதை முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

நூல் : எதுவும் பேசாத மழை நாள்

ஆசிரியர்: நபீல்

வெளியீடு : உயிர் எழுத்து பதிப்பகம் இந்தியா

விலை :40.00 [இந்தியா விலை]

தொலைபேசி: 0714914153

எஸ்.பாயிஸா அலி